2/13/08

புலம்பெயர்ந்து வாழும் தமிழன் ஒருவன் தென்றலை தன் இமை வருட அழைக்கிறான்.{பாடல்}


வன்னிக்காற்றே எந்தன் மேனி வருட
வருவாயா?
வான் புகழும் புலிவீரம் செய்தி கொஞ்சம்
சொல்லுவாயா?
கண்கள் இமைக்க மறந்து தினம் கண்ணீராய்
சொரிகிறது.
கரும்புலிகள் வீரமெண்ணும் போது கால்கள்
அசையமறுக்கிறது.
நான் விம்மி அழும் வேளையிலே வேதனை
போக்க வந்துவிடு!
வேந்தன் என் அண்ணன் முகம் காட்டி ஈழம்
விடியும் வரை இமை வருடிவிடு!

{வன்னி காற்றே.......}


கல்லறையில் உறங்கும் புலிகள் கனவுகள்
எந்தன் நெஞ்சுக்குள்ளே..
விழி துடிக்கும் போதெல்லாம் நினைவுவரும்
விடியலை எண்ணியே என் விரல் நகரும்...
பாலை மரங்கள் எல்லாம் கட்டியம் சொல்லும்
பண்டாரவன்னியன் தேசத்திற்கின்று
பறங்கியர் யாபேரும் வருகினராம்
நான் பர்த்து மகிழ முடியவில்லை...
பறக்கபோகும் புலிக்கொடியை எண்ண
நெஞ்சில் கவலையில்லை..
இனிக்கும் செய்தி தினம் சொல்லிவிடு!
ஈழம் விடியும் வரை எம்மோடுரிரு!


{வன்னி காற்றே...}


ஈரூடகம் செல்லும் படையணியாம் பகை இலக்குகள்
பல தகர்த்து என்று வானலை வந்த செய்தி கேட்டேன்.
வல்லவர்களை நினைத்து உள்ளம் குளிர்ந்தேன்.
விடியலை வெள்ளி எதிரில் தெரிய வேதனை
ஒழிவதை நெஞ்சுக்குள் உணர்ந்தேன்.
இரணைமடு தண்ணீரில் உடல் நனைத்து முகமலர்த்த ஆசை!
இலங்கையை இரண்டாக்கி இந்தியாவின் கரம் பற்றி
உயர்வில் இஸ்ரேலை வென்றிட ஆசை!
என் ஆசை நிறைவேறும் என ஆசி கொடு!
தமிழிழம் விடியும் வரை விடுதலைத்தாகம் தந்துவிடு!


{வன்னி காற்றே....}