7/6/08

புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களை பொங்கு தமிழுக்கு அழைப்பதற்கு எழுதிய கவிதை.....

பொங்கு தமிழா பொங்கு
இங்கு பொங்கிடும் யாபேரும்
புலி என்று சொல்லு...!

தீக்குள்ளே எங்களின் தேசம் . -எம்மை
தீர்த்திட துடிக்குது சிங்கள தேசம்...!
பேச்சிழந்து போகாமல் வீர வீச்சுடன் எழுவோம்.
விடுதலை பெறும் வரை எங்கள் வேகத்தை குறையோம்.

பொங்கு தமிழா பொங்கு
இங்கு பொங்கிடும் யாபேரும்
புலி என்று சொல்லு...!

விழ விழ எழுவோம்.
விரைவில் விடுதலை பெருவோம்.
பகை நிலை குழையும் வகை தொகை
தொகையாகத் திரள்வோம்...!
உலகத்தின் விழிகள் திறக்கும் வரை
விண்ணதிர குரல் கொடுப்போம்.....!

பொங்கு தமிழா பொங்கு
இங்கு பொங்கிடும் யாபேரும்
புலி என்று சொல்லு...!

வேர் அறுந்து விழ்வதற்கு நாங்கள்
விதை விதைக்கவில்லை. எங்கள்
கூடு அழிவதை ரசிப்பதற்கு - இந்த
குளிர்த்தேசம் புகவில்லை. உன்
தாயின் பாதம் தரை பதிந்த ஈழத்தை
பகை வாரி எடுக்க பல வருடமாய் திணறுகிறான்.
குண்டுகளை காவி கொட்டி உன் மண்ணை
தீ கொண்டு கருக்கிறான்....!
பிஞ்சுகளை பாவையரை இன்னும் வயசு
மிஞ்சியவரையும் ........
புலி என்று சிதைக்கிறான்.

பொங்கு தமிழா பொங்கு
இங்கு பொங்கிடும் யாபேரும்
புலி என்று சொல்லு...!

தடை போட்டு உன்னை
தடுப்பவன் யாரு..!
கூலி படை திரட்டி
உன்னை ஜெயிப்பவன் யாரு...!
காந்திதேசம் என்றாலும்,
கனடாதேசம் என்றாலும்,
புலியை பயங்கரவாதி என்றால்
நாங்கள் பயந்து ஒதுங்க மாட்டோம்....!
காலில் மண்டியிட்டு மாண்டிடமாட்டோம்.

பொங்கு தமிழா பொங்கு
இங்கு பொங்கிடும் யாபேரும்
புலி என்று சொல்லு...!

அகில உலக நாடுகளே....!
நாங்கள் அனைவரும் ஓர்
பாருங்களே...!
திக்கெங்கும் தமிழர் சத்தம் ஈழ
தேசத்தைக்காட்டுது......
தேசியத்தலைவரை தான்
தெய்வமாய் ஏற்குது...!
பகை பாசாங்கில் உன் கண்கள்
ஏனோ பலியாகிப்போகுது ....!
குண்டுகளை காவிக்கொட்டியவனை
மனிதத்தை துண்டு துண்டாய் சிதைத்தவனை
பந்தியில் வைத்து பரிமாறுகிறாய்.
எம்மை பயங்கரவாதி என்றா சொல்லுகிறாய்....!

பொங்கு தமிழா பொங்கு
இங்கு பொங்கிடும் யாபேரும்
புலி என்று சொல்லு...!

தன் இனம் அழிவதை ஓரத்தில்
நின்று பார்ப்பவன் மண்டு.
வேடிக்கை விடுத்து விருப்புடன் எழுவோம்.
தலை சாயாது என்று உலகிற்கு சொல்வோம்.

பொங்கு தமிழா பொங்கு
இங்கு பொங்கிடும் யாபேரும்
புலி என்று சொல்லு

ஓயாத அலை எழுந்த தேசம்
இன்னும் ஓராண்டில் ஈழம் விடிந்திடும் பாரும்.
மட்டக்களப்பு மன்னாரையும் பகை விட்டு விட்டு ஓடும்..!
யாழ் நகரை எம்படை ராஜ ஜாலத்தாலே வெல்லும்.
சங்கத்தமிழன் வாழ்வை ‍சரத்
பொன்சேகா குறிப்பதா....? பொறு
மண்டியிட்டு மாழும் மகிந்தாவின் சேனை

சாவின் ஓலங்கள் ஓயாது போனால்
மண்ணின் மைந்தர்களாய் நாம்
வீர மரணத்தையும் ஏற்போம்.

பொங்கு தமிழா பொங்கு
ஈழம் விடிய வேண்டிம் பொங்கு
சங்கு எடுத்து முழங்கி உண்மை
சங்கதியை இங்கு பொங்கு....

தங்கு தடையன்றி தரணி எங்கும் பொங்கு
சிங்களத்தின் கொட்டம் அடங்கும் வரை பொங்கு
சீறும் வேங்கைகள் சிரிக்கும் வரை பொங்கு
பொங்கு தமிழா பொங்கு
ஈழம் விடிய வேண்டும் பொங்கு.

4/30/08

கரிகாலன் காலத்தில் இந்த வரை படம் புலரும்.


பாரதத்தின் கீழ் உள்ள
பார் புகழும் ஒரு நாடு.

பண்டைய தமிழ் ஆண்ட

பழம் பெரும் வீடு....


முப்புறமும் கடல்

தாவி விளையாடும்...

அலை மீதும் பல்

மீன் இனங்கள் உறவாடும்.


பன்னாட்டு கப்பல்களும்

திருமலையில் கரையேறும்.

படகு ஓடும் கடல் எல்லாம்

திருநாட்டின் புகழ் பரவும்.


முத்தரிப்புத்துறைக்கு முத்துக்கள்

ஒளி கொடுக்கும்.

முத்துக்களாய் சப்த தீவுகளும்,

முகப்பில் மன்னார் இருக்கும்.


மீன் இனங்கள் சேர்ந்து

மட்டு நகருக்கு இசை கொடுக்கும்.

பொத்துவில் வரை நீளும் தமிழ் நிலத்தில்

தமிழர் பெருமை குடியிருக்கும்.


கால் பதித்த இடமெல்லாம்

கனியங்கள் கரைதட்டும்.

முல்லையும்,மணலாறும்

முறையாய் தமிழ் வளர்க்கும்.


கலை தவளும் களஞ்சியமாய்

யாழ் நகரம் தலையாய் இருக்கும்.

பண்பாட்டின் பெட்டகமாய்

பல் கலையும் புதைந்திருக்கும்.


வளம் கொழிக்கும் வன்னி புகழ்

வான் வரை நீண்டிருக்கும்.

வளையாத தமிழ் வீரம் இங்கு

வரலாறாய் திரண்டிருக்கும்.


புத்தளம் முதல் அம்பாறை வரை

தமிழீழம் அகன்றிருக்கும்.

நாம் ஆழப்போகும் தாய் நிலத்தின்

வரிவடிவில் உள்ள வரைபடம் இது.


கொள்கை பரப்பி ஆண்ட திருநாடு இன்று

நாம் வாழமுடியாத போர் வீடு.

கொடி கட்டி படை புடை சூழ

தலை நிமிர்ந்து வாழ்ந்த எம்மண்ணில்

நாம் இன்று அகதிகள்.


ஆலயத்துக்குள் தமிழ்

ஆத்மாக்கள் உயிர் அணைந்தன..

தேவனின் திருவுருவும் இனவெறி

இரத்ததில் தோய்ந்தன...


கல்வி தந்த கூடங்கள் காடையர்

கால்கள் பதிந்த சிறை கூடங்கள்.

கல்லூரி வயல்களில் மாணவர்

சடலங்கள்.


விடிவிழந்த காலையில் எம்மை

எழுப்பும் ஒப்பாரி ஓலங்கள்.

துகில் களைந்த நிலையில் தெருவில்

தமிழ் பெண்ணின் சிதை உருவம்.


சீருடைக்குள் சிங்களவன். அருகில்

கறுப்புடையில் சதி எட்டப்பன்.

பத்திரிகையும் பேச முடிவதில்லை.

பாலகரும் தப்புவதில்லை.



தலைகள் தரையில் உருலலாம்.

எதிரி முன் இன்று எம் தலைகள் குனியலாம்.

காடையர் கதைகளை அகிலமே கேட்கலாம்.

எம் கதறல்கள் எவர் செவியையும் செவிடாக்கலாம்.


இவைக்கு விடை எழுத வீரம் விரைவில் எழும்.

இந்து மாகடல் வந்து தமிழ் அன்னை

கறை கழுவும் நாள் வரும்.


அண்டம் யாவும் விரைவில் விழிக்கும்.
வான் புகழ் கொண்ட எங்கள்

வாகை வீரனை வாழ்த்திட அழைக்கும்.

இராஜ கலைஞனை செங்கம்பளத்தில்

தான் தரை அழைக்கும்.


புலிக்கொடி .நா வாயிலில்
வான் வரை ஏறும்.

தமிழனுக்கானதனிநாடு

தரணியில் விடிவாகும்.


புலிப்படை இங்கு சீராட்சி வழங்கும்.

சிங்கபூரை விஞ்சி தமிழீழம் உயரும்.

கார்த்திகை பூக்களின் கனவுகள் மலரும்.

கரிகாலன் காலத்தில் இந்த வரை படம் புலரும்.

4/27/08

கலியுகத்தின் சில கன்னியர் காதல்......(பாடல் வடிவாய்)


விடலை பாடும் வசந்த
இராகம்
காதலே...
இதை
உணரும் போது
மலிந்து
போகும் ஊடலே...
இளமை
வெடித்து துடிக்கும்
வேளை
இனிக்கும் இந்த காதலே...
இளமை
உதிர இமைமூடி
சாய்ந்து
மாயும் இந்த காதலே...
இதை
உணந்து நானும் பாடவா...?
அந்த
உண்மைகளைச் சொல்லவா...?

(விடலை பாடும்.....)

கரிய
கூந்தல் வருடும் போது
காமன்
கண்கள் விழிக்குமே...
மாயை
காட்டி ஆண் மனதை
மாற்றி
அழிவில் கூட்டிச்செல்லுமே...
இளமை
திரண்டு பருந்து மெருண்டு
உன்னை
பார்த்து சிரித்திடும்.
தன்னை
மறந்த காளை
விழிகள்
கனவில் பாடி புலம்புமே...
இவள் நிழலை நெருங்கத் துடிக்குமே...
எந்தன் நெஞ்சில் வஞ்சமில்லை
நல்லிதயம் கொண்ட ஆண் மகன்.
பெண்மை தந்த வலிகள் எண்ணி
தினமும் புலம்பி அழுகிறேன்...
இன்னும் கொஞ்சம் சொல்லவா...?
என் சோகத்தை இரை மீட்கவா...?

(விடலை பாடும்....)

காமன் கண்கள் தாங்கி கொடிய
பார்வையால் என்னை செதுக்கிறாள்.
கண்ணைக் காட்டி இதழில் உரசி
மதியை மயக்கும் இவள் கூனி தான்...!
கொஞ்சிப்பேசி, பெண்மை பாய்ச்சி,
தீயில் கோலம் போட்டவள்.
தீனி தீர்ந்த பின்னர் ஆளை மாற்றி
மாலை மாற்றி போகிறாள்.
அமைதி குழைந்த ஜீவன் நான்
பேடு இழந்து வாடுறேன்...
வேசம் ஒன்றே இவள் வேலியாய்
தன் விருப்பம் போல வாழ்வதேன்..?
இது உண்மையான காதலா...?
இதில் உண்மை ஏதும் உள்ளதா..?
இதை உணர்ந்து தான் இன்று பாடுகிறேன்...
உள்ளம் தெளிந்து தான் உயிர் வாழ்கிறேன்..

(விடலை பாடும்.....)