4/30/08

கரிகாலன் காலத்தில் இந்த வரை படம் புலரும்.


பாரதத்தின் கீழ் உள்ள
பார் புகழும் ஒரு நாடு.

பண்டைய தமிழ் ஆண்ட

பழம் பெரும் வீடு....


முப்புறமும் கடல்

தாவி விளையாடும்...

அலை மீதும் பல்

மீன் இனங்கள் உறவாடும்.


பன்னாட்டு கப்பல்களும்

திருமலையில் கரையேறும்.

படகு ஓடும் கடல் எல்லாம்

திருநாட்டின் புகழ் பரவும்.


முத்தரிப்புத்துறைக்கு முத்துக்கள்

ஒளி கொடுக்கும்.

முத்துக்களாய் சப்த தீவுகளும்,

முகப்பில் மன்னார் இருக்கும்.


மீன் இனங்கள் சேர்ந்து

மட்டு நகருக்கு இசை கொடுக்கும்.

பொத்துவில் வரை நீளும் தமிழ் நிலத்தில்

தமிழர் பெருமை குடியிருக்கும்.


கால் பதித்த இடமெல்லாம்

கனியங்கள் கரைதட்டும்.

முல்லையும்,மணலாறும்

முறையாய் தமிழ் வளர்க்கும்.


கலை தவளும் களஞ்சியமாய்

யாழ் நகரம் தலையாய் இருக்கும்.

பண்பாட்டின் பெட்டகமாய்

பல் கலையும் புதைந்திருக்கும்.


வளம் கொழிக்கும் வன்னி புகழ்

வான் வரை நீண்டிருக்கும்.

வளையாத தமிழ் வீரம் இங்கு

வரலாறாய் திரண்டிருக்கும்.


புத்தளம் முதல் அம்பாறை வரை

தமிழீழம் அகன்றிருக்கும்.

நாம் ஆழப்போகும் தாய் நிலத்தின்

வரிவடிவில் உள்ள வரைபடம் இது.


கொள்கை பரப்பி ஆண்ட திருநாடு இன்று

நாம் வாழமுடியாத போர் வீடு.

கொடி கட்டி படை புடை சூழ

தலை நிமிர்ந்து வாழ்ந்த எம்மண்ணில்

நாம் இன்று அகதிகள்.


ஆலயத்துக்குள் தமிழ்

ஆத்மாக்கள் உயிர் அணைந்தன..

தேவனின் திருவுருவும் இனவெறி

இரத்ததில் தோய்ந்தன...


கல்வி தந்த கூடங்கள் காடையர்

கால்கள் பதிந்த சிறை கூடங்கள்.

கல்லூரி வயல்களில் மாணவர்

சடலங்கள்.


விடிவிழந்த காலையில் எம்மை

எழுப்பும் ஒப்பாரி ஓலங்கள்.

துகில் களைந்த நிலையில் தெருவில்

தமிழ் பெண்ணின் சிதை உருவம்.


சீருடைக்குள் சிங்களவன். அருகில்

கறுப்புடையில் சதி எட்டப்பன்.

பத்திரிகையும் பேச முடிவதில்லை.

பாலகரும் தப்புவதில்லை.



தலைகள் தரையில் உருலலாம்.

எதிரி முன் இன்று எம் தலைகள் குனியலாம்.

காடையர் கதைகளை அகிலமே கேட்கலாம்.

எம் கதறல்கள் எவர் செவியையும் செவிடாக்கலாம்.


இவைக்கு விடை எழுத வீரம் விரைவில் எழும்.

இந்து மாகடல் வந்து தமிழ் அன்னை

கறை கழுவும் நாள் வரும்.


அண்டம் யாவும் விரைவில் விழிக்கும்.
வான் புகழ் கொண்ட எங்கள்

வாகை வீரனை வாழ்த்திட அழைக்கும்.

இராஜ கலைஞனை செங்கம்பளத்தில்

தான் தரை அழைக்கும்.


புலிக்கொடி .நா வாயிலில்
வான் வரை ஏறும்.

தமிழனுக்கானதனிநாடு

தரணியில் விடிவாகும்.


புலிப்படை இங்கு சீராட்சி வழங்கும்.

சிங்கபூரை விஞ்சி தமிழீழம் உயரும்.

கார்த்திகை பூக்களின் கனவுகள் மலரும்.

கரிகாலன் காலத்தில் இந்த வரை படம் புலரும்.

No comments: