2/23/08

தமிழிழ விடுதலைப் புலிகளில் தத்துவாசிரியரும், மதியுரைஞர், ஈழஞானி, தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பிரிவால் எழுந்த உணர்வுகள்..


குரல் கொடுத்த தேசத்தின் குரலின்று
குரல் இழந்த்ததோ....!
கூற்றவனின் சூழ்ச்சியினால்
ஈழப் பூ உலர்ந்ததோ .......!
கட்டியம் சொன்ன பெருமகனை
காலன் எம்முன் கயிரிடை திணிப்பதா?
காலத்தின் உயிர் துடிப்பினை கரிகாலன்
காதில் உரைப்பவனை.....

வெறும் நாணல் நீ..!
எங்கள் வேங்கையை சரிப்பதா?
சத்தியத்திற்காய் வாழ்ந்த மகன்.
அரசியல் சாதனை மடியில் தவழும் புகழ்.
சாவுகொள் கொடுநோய் சூழ்ந்தும் கூட‌
காவிய நாயகன் கரம் பற்றி
சாவினை சாய்க்க எழுந்த அரண்.

மட்டு மண்டூர் பெற்றுத்தந்த பாலா மாமா..!
தமிழ் மாந்தர் விழியில் ஒளி
காணத்துடித்தாய் நீ மாசிகக்கண்ணா...!
பல்நெறியாளுகையில் வல்ல பரந்தாமா..!
ஈழப் பார்த்தீபனின் இரதம் அசைத்தாய் மதிவண்ணா!

உலகு முழுதும் ஓர் குரலாய்
உண்மைகளை உருவமைத்த கரம்...
ஊண் முழு பிணி புகுந்தும்
தமிழ் உறவுக்காய் வாழ்ந்த வரம்...
ஈழதேசம் முழுவடிவம் பெறவே
உயிர்பிரியும் வரை விடிவை நினைத்தீர்...!
தமிழர் தேசம் எதிரில் தெரிகையில்
எம்மை பிரிந்த்து போனது எங்கே..?

பாலசிங்கம் ஐயா...! ஐயா...!
பாலசிங்கம் ஐயா...! அன்பால்
நீங்கள் பாலநெஞ்சன் ஐயா...!
இராஜதந்திரங்களை ஆழும் மந்திரியின் ஐயா...!
அண்ணனுக்கு அண்ணனாய்
அவதாரபுருசனாய் அன்னை மண்
காக்க வேண்டி அன்ரி அடேலுடன் வந்தவர்...

திம்பு முதல் ஜெனிவா வரை மேசைதோறும்
பகை பேச்சு மூச்சைக்குழைத்தவர்...
மானமுள்ள புலத்தமிழர் யாவரையும்
ஒர் முகமாய் இணைத்தவர்...
ஆறாத தமிழர் தமிழர் சோகத்தால்
அகிம்சை வழியை துறந்தவர்...
அண்ணனின் போர் அசைவுக்காய்
ஆரூடம் சொன்னவர்...
இனி பேச்சில்லை என்றவுடன்
நீங்கள் மூச்சிழந்து தூங்குவதேன்...?

உங்கள் பேச்சின் ஓசை கேட்ட எமக்கு
தாயக மூச்சின் வேகம் குறையாது...
வேலு மைந்தன் உள்ள வரையில்
தமிழர் தாகம் என்றும் ஓயாது...
விடிவு எங்கள் எதிரில் தெரிய‌
நீங்கள் விழிகள் மூடக்கூடாது.
ஈழதாகம் வெகு தொலைவில் இல்லை
இமைகள் திறந்து பாருங்கள்.

இது ஈழஞானி தூங்கும் நேரம்
எங்கள் விழிகள் கசியக்கூடாது..
புலி குகைக்குள் வாழும் செருக்கில்
நாங்கள் துவக்கை எடுத்து களம் புகுவோம்.
இனி வெடிக்கும் திசையில் விடிவு முளைக்கும்
பெரும் விருட்ச்சம் போல உருமாறும்.
விதை குழிக்குள் உறங்கும் மண்ணின் சிசுக்கள்
விழிக்கப் போவதைப்பாருங்கள்.
பாலதேவன் எங்கள் ராஜகுரு நினைவு
நிஜமாகும் பொறுத்திருங்கள்.

பகை சாய்க்க புலியாய் எழுவோம்...
புயலாய் போர்க்களம் புகுவோம்...

இது உறுதி...

`` தமிழரின் தாகம் தமிழிழ தாயகம்''

1 comment:

Anonymous said...

beautiful baby

by jennagan