2/25/08

நிம்மதியை தேடி....?


பொன்னான வாழ்வு மண்ணாகி போனது..!
பொய்யான வாழ்வுதான் நிலையாகி போனது.!
சொந்தங்கள் அங்கே....! வெறும்
சோகங்கள் தான் இங்கே..!
கண்களில் நீருமில்லை...
வாழ்வதில் நிம்மதியுமில்லை....?

விழி அசந்து தூங்கிவிட்டால் வந்திடுமா
வாழ்வில் நிம்மதி ....?
கனவுகளை தொலைத்திடுவீர்..
கற்பனையை நிஜமாக்கிடுவீர்....
வாழ்வில் நிம்மதி தேடி வரலாற்றை
புரட்ட வேண்டாம்...
வழி தவறி வம்புகள் புரிய வேண்டாம்....

உன் நிலையை நீ உணர்வாய்...
உரிமையுடன் வழி மொழிவாய்...

வாழ்க்கை என்னும் கடல்
தன்னில் ஓட்டை விழுந்த ஓடம் நீ....
கண்ணசைந்து தூங்கிவிட்டாள்
கடல் உன்னை விழுங்கிவிடும்...

வாழ்வுதனை செப்பம் செய்...!
விடிவொன்றை விடையாக்கு....!
வெற்றி உன் வாயில் வரும்..!

கடல் தாண்டி வந்த கனடாவிலும்
நிம்மதியில்லை ....
அதிகாலையில் அதிவூட்டும் கடிகாரம்
ஐந்து மணிக்குச் சல்லடை செய்யும்..!
காதடைத்து,கனவுகலைந்து,கதர்குலைந்து
கண்பிதுங்க , காசுக்காக ஓட வேண்டும்...!

வழியிலே வாகன நெரிசல்
வேகமாக ஓடவேண்டும்...
பின்னால் வந்த மாமா படு குசியாக‌
டிக்கற் தருவான்.
மனமுடைந்து மறுபடியும் ஓடவேண்டும்.

வேகம் காணாமல் வேலைக்கும் தாமதம்.
வியர்வை சிந்தி உழைத்த நான்கு இரண்டு
மணியில் ஒரு மணி விரயம்....
மறுபடியும் ஒடவேண்டும் மற்றைய வேலைக்கு...

ஓடி ஓடி வந்ததா நிம்மதி..?
வேலை முடிந்து நான் வந்தேன்,
நள்ளிரவில் வீட்டுக்கு....

தோள் கொடுத்தவள் முகம் தெரியாது!
தூங்கும் சிசு என் முகம் அறியாது!
மறுநாளும் காலையில் மறுபடியும்
ஓட்டம் ஓடி ஓடி வந்ததா நிம்மதி..?
மாத முடிவில் தலைக்குள் வந்தது மந்தம்.
அந்த இந்த வில்லென்று அறுபது வில் கட்டணும்.
மோல்க்கேச்சுக்குள் வீடு மூழ்கியிருக்கும்..
கடன் அட்டையில் தான் எம் வாழ்விருக்கும்..!
யாரிடம் சொல்லுவது நமக்குள்ள தொல்லைகளை..?

ஊரிலே உறவுகளின் தலைகளை கிள்ளுறான்...
என்று விடியும் எமது ஈழம் என்ற ஏக்கங்கள் ஒரு புறம்.
வெளிச்ச‌த்தில் நாமிருந்தும்
வெளி வேச‌ங்க‌ள் தான் மிச்சம்.
ஓடி ஓடி வ‌ந்த்ததா நிம்மதி..?

எப்போது வாச‌ல் வ‌ரும் எம‌க்கு இந்த‌ நிம்மதி.
எமக்கு இது புரிய‌வில்லை...ஏழ்மையும் வில‌க‌வில்லை..
இரவு ப‌க‌லாய் உழைத்தும் இறைவனும் இர‌ங்கவில்லை..

சிந்தனைகள் சிறகாக சிகரத்தை தொடுகிறது.
உண்மைகளோ புரியவில்லை..
நிம்மதியும் கிடைக்கவில்லை..
இயந்திரமாய் உழைத்தாலும்...
இரக்கம் கொண்ட இதயங்கள் நாம்...
இறைமைக்காக ஏங்குகிறோம்....
நிம்மதியை தேடி....!




இந்த கவிதை கனடாவில் இருந்து ஒலி பரப்பாகும் CMR வானொலியில் நந்தவனம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது.

No comments: